Thursday, November 20, 2008

முதல் பக்க Praveen Samy கட்டுரை (The Hindu) 20-11-08

Praveen Samy என்பவர் 'Politics helped Hindutva Terrorists' என்று ஒரு யூகமான கட்டுரையைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கே, அவருடைய கட்டுரை முதல் பக்கத்தில் வந்தது ஆச்சரியமாக இருக்கக் கூடும். மத்ய பிரதேஷில் தேர்தலுக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் இக் கட்டுரைக்கு The Hindu முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. மத்ய பிரதேஷ் முதல்வராக வாய்ப்பு உள்ள திக் விஜய் சிங் சொல்லியதாக ஒரு யூகக் கட்டுரையை இப்போது வெளியிடுவதற்கான அவசியம் என்ன என்பது உள்ளங்கை நெல்லிக் கனி !.....
திக் விஜய் சிங், இந்த விஷயத்தை பல வருடங்களாக 'ஹிந்து தீவிரவாதம்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் சொல்வதில் அவருக்கே நம்பிக்கையிருந்தால், குஜராத் வழக்கு மாதிரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்து, போலீஸ் துப்பறிதலை நீதிமன்ற பார்வை கீழ் நடத்த முயன்று இருக்கலாம். இல்லாவிடில் ஹிந்து ராம் கூட அதை செய்திருக்கலாம். என் செய்யவில்லை ?.....

No comments: