Saturday, November 22, 2008

On Advani-Manmohan Singh chat on Malegaon blast 'Sadhvi'

நல்லதொரு நிகழ்வு நடந்திருக்கிறது...!
எதிர்க் கட்சித் தலைவர் என்ன சொன்னாலும் அதை அரசியலாக பார்க்காமல், மதிப்பு தந்து, அதற்கான விளக்கமும் தர முயற்சித்த பிரதமர் பாராட்டுக்குரியவர்.

இது சம்பந்தமான அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை மீடியா புறக்கணித்தால் நல்லது என்று அட்வைஸ் செய்ய கிளம்பினால் .....
அது விழலுக்கு இறைத்த நீர் !.....

இதற்குப் பிறகும், அத்வானி, சனிக்கிழமையன்று, மும்பை ATS -ஐ, ஒரு பிடி பிடித்திருக்கிறார் என்றால், அவரிடம் காட்டப்பட்ட தகவல்கள் அவருக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

Thursday, November 20, 2008

அதே Praveen Samy யின் 14-ம பக்க கட்டுரை (The Hindu) 20-11-08

பாவம் Praveen Swamy ! நல்ல மனிதர் போலிருக்கிறது ! உண்மையை எழுதிவிட்டார்.
'Dead man's tale holds key to Hindutva terror secrets' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், 'Little to go on' எனும் குறுந்தலைப்பில் என்ன எழுதியிருக்கிறார் ?.....
" So far, the Maharastra Police have been UNABLE to secure the arrest of either Mr. Chatterjee or Kalsangram. Barring the solo witness's testimony, therefore, investigators have little to go on."
அதே போல, கடைசி பேராவில் என்ன சொல்கிறார் என்றால் .....
" So far, though, they have been unable to locate either the explosives or devices used in the attacks or the actual perpetrators."
ஒண்ணுமே இல்லாமல் உரத்து கூவிக்கொண்டிருக்கிறது Mumbai ATS என்பதற்கு இதுவே உதாரணம் !
அதனால்தான் அது 14-ம பக்கத்திற்கு தள்ளப் பட்டுவிட்டதோ, The Hindu-வினால் ?.....

முதல் பக்க Praveen Samy கட்டுரை (The Hindu) 20-11-08

Praveen Samy என்பவர் 'Politics helped Hindutva Terrorists' என்று ஒரு யூகமான கட்டுரையைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கே, அவருடைய கட்டுரை முதல் பக்கத்தில் வந்தது ஆச்சரியமாக இருக்கக் கூடும். மத்ய பிரதேஷில் தேர்தலுக்கு இன்னமும் சில தினங்களே உள்ள நிலையில் இக் கட்டுரைக்கு The Hindu முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. மத்ய பிரதேஷ் முதல்வராக வாய்ப்பு உள்ள திக் விஜய் சிங் சொல்லியதாக ஒரு யூகக் கட்டுரையை இப்போது வெளியிடுவதற்கான அவசியம் என்ன என்பது உள்ளங்கை நெல்லிக் கனி !.....
திக் விஜய் சிங், இந்த விஷயத்தை பல வருடங்களாக 'ஹிந்து தீவிரவாதம்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் சொல்வதில் அவருக்கே நம்பிக்கையிருந்தால், குஜராத் வழக்கு மாதிரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்து, போலீஸ் துப்பறிதலை நீதிமன்ற பார்வை கீழ் நடத்த முயன்று இருக்கலாம். இல்லாவிடில் ஹிந்து ராம் கூட அதை செய்திருக்கலாம். என் செய்யவில்லை ?.....

முதலில் 'Ugly defence of the indefensible' எனும் தலையங்கம்

தலையங்கத்தில் உள்ள BJP, Sangh Parivaar, Advani என்கிற வார்த்தைகளுக்கு பதிலாக Samajwadi, so called Secularists, Amar Singh என்பவற்றை பொருத்திவிட்டு, 'malegaon' என்பதற்கு பதிலாக, 'Delhi Bomb blast' என்று திருத்திவிட்டு, 'Sadhvi, Lt. Col. Shrikant Purohit" என்பவற்றுக்கு பதிலாக சில இஸ்லாமிய பெயர்களை எழுதிவிட்டால், மேற்படி தலையங்கம் டெல்லி குண்டு வெடிப்புக்கும் பொருந்தும்.
டெல்லி குண்டு வெடிப்பின்போது , பலரும்(அமர் சிங் உட்பட) 'தவறான ஆட்கள் கைது செய்யப்படுகிறார்கள்' என்று கூறியபோது, The Hindu அதை இதே அளவுக்கு கடுமையாக கண்டித்ததா ?.....
இல்லையெனில், ஏன் இந்த பாரபட்சம் ?.....

டெல்லி குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் மட்டும்தான், தீர்ப்பு வரும் வரை அப்பாவிகளா ?..... மலேகான் குண்டுக்கு காரணமானவர்களை Mumbai ATS கைது செய்துவிட்டாலே அவர்களை கழுவில் ஏற்றிவிட வேண்டுமா ?....
நியாயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை.
பத்திரிகை தர்மமும் அப்படிதான்.

The Hindu - வின் 'காவி கசப்பு'

The Hindu - வின் 'காவி கசப்பு' என்பது எல்லோரும் அறிந்ததே !
இருப்பினும் சில நியாயமான விஷயங்களையாவது, அப்படியே எழுதினால் பத்திரிகை தர்மமாக இருக்கும்.

20-11-08 அன்று மலேகான் குண்டு வெடிப்பு பற்றி, The Hindu இரண்டு செய்திகள் மற்றும் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அவை பற்றி ...

தனித்தனியாக விமர்சனங்கள் - அடுத்தடுத்து !.....

Friday, November 14, 2008

குண்டு வெடிப்பு - குறுக்கு வழியில் போலீஸ் ?

மாலேகான் குண்டு வெடிப்பு போலீஸ் விசாரணை 'லீக்' விஷயங்கள் , போலீஸ்க்கு திருப்தி அளிக்கும் வகையில் பத்திரிக்கைகள் மற்றும் டிவி க்கள் துணையோடு சென்று kondirukkindrana.
இந்த பிரச்சாரம் மாநில தேர்தல்கள் முடிந்த பிறகும் தொடரலாம் - மாநில தேர்தல் முடிவுகளைப் பொறுத்து !
மும்பை போலீஸ் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வந்தால், நாடாளுமன்ற தேர்தல் வரை 'லீக்' தொடரும்.
-------------------------------------------------------------------------------------------
பல கேஸ்களில் போலீஸ் அசடு வழிவதற்கு காரணம் என்ன என்பது பற்றி ...
இன்னொரு நாள் பேசுவோம்.

கங்குலியின் கடைசி டெஸ்ட்

இந்தியாவில் ஒரு சாபக்கேடு. நேர்மையாக, ஊழல் பண்ணாமல் இருந்தால் மட்டும் நீங்கள் நல்லவராகிவிட முடியாது.
பல நேரங்களில் பலவற்றுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போனால் ... நீங்கள் நல்லவர் !...
அதே சமயம் சட்டத்தையும் விதிகளையும் கடுமையாக கடைபிடிக்கிறவர்களாக இருந்தால், உங்களுக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்களே ஓட்டுபோடமாட்டார்கள்.
கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
கங்குலி தலைப்பில் இதை எதுக்காக சொல்கிறேன் என்றால்
அவரும் அப்படிதான் .....!
சர்தார் படேலை விட நேருவுக்கு அதிக மவுசு.
அத்வானியை விட வாஜ்பாயி.
அதே போல கங்குலியை விட Sachin, Dravid, Lakshman & Kumble.
வழ வழ kozha kozhaakkalukku இருக்கிற mariyaadhai, கொஞ்சம் strong aaga iruppavargalukku indhiyaavil mariyaathai kidaiyaathu.
sogamthaan !.....

சட்டக்கல்லூரியா அல்லது மட்டக்கல்லூரியா?

பார்க்கவே கொடுமையாக இருந்தது.
கொடூரங்கள் எப்படி இவ்வளவு எளிதாக துளி தயக்கமில்லாமல் செய்யப்படுகிறது என்று தெரியவில்லை.
சட்டம் ஒழுங்கு என்பது சட்டக்கல்லூரியிலேயே இருப்பதாக தெரியவில்லை.
ஒரு காலத்தில் வக்கீல் வேலைக்கே வர யோசிப்பார்கள் - பெண் தரமாட்டார்கள் என்று ! ஆனால் இப்போது அதுதான் அரசியலில் நுழைவதற்கான அனுமதி சீட்டு ஆகிவிட்டது. டிவி யை பார்த்த போலீஸ் அதில் தென்பட்டவர்களை பிடிக்கிறதோ இல்லையோ, அரசியல் கட்சிகள் அவர்களுக்கு மாலை போட்டு வரவேற்க தயாராக இருக்கலாம்.
வருகிற electionil நமக்குத்தான் பிரச்சினையே ....!
TV yil neengal பார்த்த யாரோ ஒருவர் உங்களுடைய பிரதிநிதியாக சட்டமன்றதுக்கோ நாடாளுமன்றத்துக்கோ சென்று இதே சாதனைகளை அங்கேயும் புரியலாம்.
தயாராயிருங்கள் !.....

Monday, November 3, 2008

திங்கள் திருப்பங்கள்

ரஜினி - ரசிகர் சந்திப்பு

இன்றைய ஹாட் டாபிக்... ரஜினி தன் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னது ...
சன் டிவி தன்னுடைய எட்டு மணி அழுகை சீரியலை தள்ளி வைத்துவிட்டு , ரஜினி கேள்வி பதிலை ஒளிபரப்பியது.

என்னைப் பொறுத்தவரை ... ரஜின்யின் பதில்கள் எப்படி இருந்தன என்றால் ...
வெளிப்படையான பேச்சு - அறுபது sathavigitham
தெளிவு - பத்து sathavikitham
mazhuppal - பத்து sathavikitham
sambanthamillaamal pesiyathu - பத்து sathavikitham
kadamaiyai செய் palanai ethirpaar என்ற ariyaa vilakkam - பத்து சதம்

ரஜினி rasikargalukku ennudaiya kanippil udanpaadu illaamal irukkalaam.
mattravargaluku IT MUST BE OK.
----------------------------------------------------------------------------
Mumbai ATS-in puthu karadi ( malegaon blasts) .....

பெண் thuraviyum வேறு ஒருவரும் tholaipesiyil pesiyathu neethimandrathil thaakal seyyappattirukirathu. ஒரு appaavi தன்னை police (thavaragavenum) kaithu செய்ய varugirathu என்று therinthaal, policidam என்ன sollalaam என்பதை discuss seivathu vazhakkamaaga nadakkooduyathuthaan.
kaithu seiyappogirom என்பதை pathgthirikaigalukku 'leak' seithuvittu, பிறகு evarudaiya phonai 'tap' seithaalum, antha uraiyaadal appadithaan irukkum. vakkeeluku phone seithaalum, அவரும் idhaiyethaan solliyiruppaar. athanaal அவரும் kuttravaaliyaa ?
yosippom.

பல kelvikalku police adhikaari "investigation on" endruthaan பதில் சொல்லி kondirunthaar.
(times now tv athai LIVE -aga ஒளிபரப்பியது.
NDTV எதையும் கண்டு kollaveyillai.
CNN-IBN ஆஹா explosive news என்று aarambiththu பிறகு silent aagivittathu.
Headlines today - intha evidencekku பிறகு எப்படி court penn thuraviyai மீண்டும் police visaranaikku anuppaamal, judicial custody-ku anuppiyathu? appadiyaanaal telephone aadhaarangalai court perithhga eduththu kollavillaiyaa என்று uruppadiyaana ஒரு கேள்வியை kettuvaithathu.
kuzhappam மேலும் kuzhappam


Friday, October 31, 2008

வெள்ளி வேடிக்கைகள்

மாலேகான் குண்டு வெடிப்புகள் விஷயத்தில், மும்பை ATS (Anti Terror Squad) , பத்திரிக்கைகளுக்கு 'லீக்' செய்யும் விஷயங்களையெல்லாம் பார்த்தால்...
தகுந்த சாட்சியம் கிடைக்காமல் வெறும் வதந்தியிலேயே ஓட்டிவிடலாம் என்று நம்புவது தெரிகிறது.
துறவி பிராக்கியாவின் மோட்டார் பைக் எப்போது காணாமல் போனது ?...
அது பற்றி FIR எதுவும் தரப்பட்டுள்ளதா ?
அமோனியம் NITRATE எங்கு வாங்கப்பட்டது ?
டிரிகர் எங்கு, யாரால் பொருத்தப்பட்டது ?
யார் பைக்கை கொண்டு வந்து நிறுத்தியது ?
இது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் ATS-ஆல் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
எனவே, இன்று ஒரு குண்டு போட்டிருக்கிறது - TIMES NOW டிவி மூலமாக !...
ABINAV BHARATH அமைப்புக்கு பங்களாதேஷ் தொடர்பு இருப்பதாக செய்தி 'லீக்' செய்யப்பட்டுள்ளது.
முதலில் துறவிக்கு தொடர்பு இருப்பதாக கதை.
பிறகு முன்னாள் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி 'லீக்' .
அதையடுத்து இந்நாள் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கதை.
இந்திய இராணுவம் அதை மறுத்தவுடன், துறவிக்கு NARCO TEST எடுப்பதாக செய்தி. (NARCO TEST என்பது கோர்ட்டில் நிற்காது. இருப்பினும் ஏதேனும் CLUE கிடைக்கிறதா என்பதற்காகத்தான் அந்த டெஸ்ட் ).
துறவி பற்றி புழுதி கிளப்பியாயிற்று.
இனி ADHAI MOODAMUDIYATHU.
எனவே, இப்போது புது புரளி - பங்களாதேஷ் தொடர்பு இருப்பதாக.
பார்க்கலாம்... நாளைய புதுக்கதை என்ன என்று ?!...





Thursday, October 30, 2008

இன்றைய குழப்பங்கள்

முதலில் இன்றைய அஸ்ஸாம் குண்டு வெடிப்புகள் பற்றி .....

NDTV செய்திப்படி குண்டு வைத்தவர்கள் 'ULFA' -ஆக இருக்கலாம்.

TIMES NOW செய்திப்படி அது... ULFA மற்றும் சீனா கைகோர்த்து நடத்தியிருக்கலாம்.

CNN-IBN செய்திப்படி அது... ULFA மற்றும் பங்களாதேஷ் தீவிரவாதிகளாக இருக்கலாம்.

ஊகங்கள் பல !...

ஆனால் உண்மை எது ?

காத்திருந்து பார்க்கலாம்.
ஹாய் நண்பர்களே,

முதல் முறையாக தமிழில் உங்களோடு வலைக்குள்ளே !.....

'மீடியா மிளகாய்' - மீடியா பற்றி நாம் இங்கு நிறைய பேசப்போகிறோம்.

அதுவும் காரசாரமாக - அதனால்தான்... இது மீடியா மிளகாய் !